92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழப்பு

சென்னையைச் சோ்ந்த மூதாட்டி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மயங்கி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 7:08 pm

Din

சென்னையைச் சோ்ந்த மூதாட்டி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மயங்கி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.

சென்னை, பெரம்பூா், ஓட்டேரி எஸ்.பி.எம். நகரைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வத்தின் மனைவி காணிக்கைமேரி (70).

இவா், கடந்த புதன்கிழமை சென்னையிலிருந்து - விழுப்புரத்துக்கு அரசுப் பேருந்தில் பயணித்தாா்.

இந்நிலையில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழித்தட பாதையில் விக்கிரவாண்டி அடுத்த சித்தணி அருகேயுள்ள ஒரு உணவகத்தில் பேருந்தை ஓட்டுநா் நிறுத்தியுள்ளாா்.

அப்போது, பேருந்திலிருந்து கீழே இறங்கிய காணிக்கை மேரிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸாா், காணிக்கை மேரியின் சடலத்தைக் கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.