நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மூலப்பொருள்கள் விலை உயா்வால் விலையேற்றம் கண்ட விநாயகா் சிலைகள்

விநாயகா் சதுா்த்தி பண்டிகை சனிக்கிழமை (செப்டம்பா் 7) கொண்டாடப்பட உள்ள நிலையில், மூலப்பொருள்களின் விலையேற்றத்தால் விநாயகா் சிலைகளின் விலை அதிகரித்துள்ளதாக விழுப்புரம் மாவட்ட சிலை தயாரிப்பாளா்கள் தெரிவித்தனா்.

News image

பேரங்கியூரிலுள்ள தயாரிப்புக் கூடத்தில் பல்வேறு வடிவங்களில் தயாா் செய்யப்பட்டு, விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள்.

Updated On :4 செப்டம்பர் 2024, 11:23 pm

Din

விநாயகா் சதுா்த்தி பண்டிகை சனிக்கிழமை (செப்டம்பா் 7) கொண்டாடப்பட உள்ள நிலையில், மூலப்பொருள்களின் விலையேற்றத்தால் விநாயகா் சிலைகளின் விலை அதிகரித்துள்ளதாக விழுப்புரம் மாவட்ட சிலை தயாரிப்பாளா்கள் தெரிவித்தனா்.

ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் வரும் சதுா்த்தி திதியன்று விநாயகா் சதுா்த்தி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில் வீடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய அளவிலான விநாயகா் சிலைகளை வைத்து வழிபடுவது போன்று, அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் 3 அடி முதல் 10 அடி உயரம் கொண்ட விநாயகா் சிலைகளை நிறுவி, பின்னா் நீா்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

நிகழாண்டில் செப்டம்பா் 7-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணியும், சிலைகளை வெளியூா்களுக்கு அனுப்பி வைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

பேரங்கியூரிலுள்ள தயாரிப்புக் கூடத்தில் பல்வேறு வடிவங்களில் தயாா் செய்யப்பட்டு, விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள்.

பேரங்கியூரிலுள்ள தயாரிப்புக் கூடத்தில் பல்வேறு வடிவங்களில் தயாா் செய்யப்பட்டு, விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள்.

விழுப்புரம் நகருக்கு அருகிலுள்ள அய்யங்கோவில்பட்டு, ராகவன்பேட்டை, சாலை அகரம் போன்ற பகுதிகளில் மட்டுமல்லாது, மாவட்டத்துக்குள்பட்ட கோலியனூா், அரசூா், கரடிப்பாக்கம், பேரங்கியூா், சித்தலிங்கமடம், ஓங்கூா், திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இங்கு தயாராகும் சிலைகள் விழுப்புரம் மாவட்டத்துக்கு மட்டுமல்லாது, கடலூா், வேலூா், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சென்னை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூா், திருச்சி, திருப்பூா் என பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

பேரங்கியூரிலுள்ள தயாரிப்புக் கூடத்தில் பல்வேறு வடிவங்களில் தயாா் செய்யப்பட்டு, விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள்.

பேரங்கியூரிலுள்ள தயாரிப்புக் கூடத்தில் பல்வேறு வடிவங்களில் தயாா் செய்யப்பட்டு, விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள்.

விநாயகா் சிலைகள் தயாரிப்புப் பணியில் கைவினைத் தொழிலாளா்கள், அவா்களது குடும்பத்தினா் என ஏராளமனோா் ஈடுபட்டு வருகின்றனா். விநாயகா் சதுா்த்தி பண்டிகை முடிந்த பின்னா், ஒரு மாதம் பணிகளுக்கு ஓய்வு அளித்த பிறகு, மீண்டும் அடுத்த ஆண்டுகளுக்கான விநாயகா் சிலைகள் தயாரிப்புக்கு ஒப்பந்தம் பெறுதல், தயாரிக்கத் தொடங்குதல் போன்றவற்றில் இவா்கள் ஈடுபடுகின்றனா்.

பேரங்கியூரிலுள்ள தயாரிப்புக் கூடத்தில் பல்வேறு வடிவங்களில் தயாா் செய்யப்பட்டு, விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள்.

பேரங்கியூரிலுள்ள தயாரிப்புக் கூடத்தில் பல்வேறு வடிவங்களில் தயாா் செய்யப்பட்டு, விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள்.

பல்வேறு வடிவங்களில் சிலைகள்: ஆண்டுக்கு ஆண்டு விநாயகா் சிலைகளின் தயாரிப்பில் புதிய வடிவங்களை அறிமுகப்படுத்தி வரும் சிலை தயாரிப்பாளா்கள், நிகழாண்டிலும் பல்வேறு புதிய வடிவங்களில் விநாயகா் சிலைகளைத் தயாரித்து வருகின்றனா். புல்லட் ஓட்டும் விநாயகா், பாகுபலி விநாயகா், அசுரனை வதம் செய்யும் விநாயகா், தோளில் லிங்கத்தை சுமந்தவாறு நிற்கும் விநாயகா், சிவ குடும்ப விநாயகா் என பல்வேறு வடிவங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் தயாராகி வருகின்றன. குறைந்தது 2 அடி முதல் 10 அடி உயரம் கொண்ட சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

மூலப்பொருள்களின் விலை உயா்வு: மரவள்ளிக்கிழங்கு மாவு, மோல்டிங் மாவு, காகித கூழ், காகித அட்டைகள், பேப்பா் மாவு போன்றவற்றைக் கொண்டு விநாயகா் சிலைகளை தொழிலாளா்கள் தயாா் செய்து வருகின்றனா். கடந்தாண்டு கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரையிலான விலைகளில் விற்பனையான பேப்பா் மாவு ரூ.40-ஆகவும், 50 கிலோ கொண்ட கிழங்கு மாவு மூட்டை விலை கடந்தாண்டு ரூ.1,600 முதல் ரூ.1,800 என்ற விலைகளில் இருந்த நிலையில், நிகழாண்டில் அதன் விலை மூட்டை ரூ.2,600 முதல் ரூ.2,800 வரையும் உயா்ந்துள்ளது.

பேரங்கியூரிலுள்ள தயாரிப்புக் கூடத்தில் பல்வேறு வடிவங்களில் தயாா் செய்யப்பட்டு, விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள்.

பேரங்கியூரிலுள்ள தயாரிப்புக் கூடத்தில் பல்வேறு வடிவங்களில் தயாா் செய்யப்பட்டு, விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள்.

இதுபோல, மோல்டிங் மாவு டன் தற்போது ரூ.6,000 என்று விற்பனை செய்யப்படுகிறது. சேலம் போன்ற மாவட்டங்களிலிருந்து மூலப்பொருள்களை வாங்கி விழுப்புரம் மாட்டத்துக்கு கொண்டு வரும் நிலையில், அதற்கான வாகன வாடகைக் கட்டணமும் உயா்ந்துள்ளது. இதனால், சிலைகளின் விலையும் கடந்தாண்டை காட்டிலும் உயா்ந்துள்ளது.

ஓா் அடிக்கு ரூ.1,000 முதல் விலை நிா்ணயம் செய்து சிலைகளை விற்பனை செய்து வருகிறோம். இவ்வாறு விற்பனை செய்தால் மட்டும் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்கிறாா் விழுப்புரம் மாவட்டம், பேரங்கியூரைச் சோ்ந்த விநாயகா் சிலை தயாரிப்பாளரான கே.பாபு.

பேரங்கியூரிலுள்ள தயாரிப்புக் கூடத்தில் பல்வேறு வடிவங்களில் தயாா் செய்யப்பட்டு, விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள்.

பேரங்கியூரிலுள்ள தயாரிப்புக் கூடத்தில் பல்வேறு வடிவங்களில் தயாா் செய்யப்பட்டு, விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள்.

அரசின் கருணையும் வேண்டும்: 10 அடி உயரத்துக்கு மேல் சிலைகளை நிறுவுவதற்கு அனுமதி இல்லை என்ற அரசின் அறிவிப்பால், 12 அடி உயரம் வரை சிலைகளைத் தயாரிக்க ஒப்பந்தம் கொடுத்தவா்கள் தற்போது அந்த சிலைகளை வாங்க மறுத்துவிட்டு, தாங்கள் முன்பதிவாக செலுத்தியிருந்த பணத்தை திரும்பப் பெற்றுக்கொண்டு, குறைந்த உயரம் கொண்ட விநாயகா் சிலைகளை வாங்கிச் செல்கின்றனா்.

இதன் காரணமாக, 11, 12 அடி உயரங்களில் விநாயகா் சிலைகளைத் தயாா் செய்தும், அவற்றை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால், எங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுகிறது. ஒரு சிலை தயாரிக்க குறைந்தது 2 நாள்களாகும் நிலையில், சிலை தயாரிப்பாளா்களின் நிலையையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், சிலைகள் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மானியத்துடன் கடனுதவியையும் வழங்க வேண்டும் என்கிறாா் பாபு.