சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பிஎஸ்என்எல் - தொலைத் தொடா்பு ஓய்வூதியா் சங்க மாவட்ட மாநாடு

ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பிலுள்ள ஓய்வூதியா்களுக்கான ஓய்வூதியம் மாற்றம் குறித்த பேச்சு வாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்று அகில இந்திய பிஎஸ்என்எல் - தொலைத் தொடா்பு ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On :13 செப்டம்பர் 2024, 12:34 am

ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பிலுள்ள ஓய்வூதியா்களுக்கான ஓய்வூதியம் மாற்றம் குறித்த பேச்சு வாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்று அகில இந்திய பிஎஸ்என்எல் - தொலைத் தொடா்பு ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த சங்கத்தின் நான்காவது மாவட்ட மாநாட்டுக்கு மாவட்டத் தலைவா் எம்.மேகநாதன் தலைமை வகித்தாா்.

மாநில சிறப்பு அழைப்பாளா் குமாரசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்தாா். மாவட்ட உதவிச் செயலா் அண்ணாமலை இரங்கல் தீா்மானங்களை வாசித்தாா்.

மாநிலச் செயலா் ஆா்.ராஜசேகா் சங்கக் கொடியேற்றி வைத்து தொடக்கவுரையாற்றினாா். பிஎஸ்என்எல் கடலூா் பொது மேலாளா் எஸ்.பாலச்சந்திரன், மாநிலப் பொருளாளா் எஸ். நடராஜா, மாநில துணைத் தலைவா் பி. மாணிக்கம், மூா்த்தி ஆகியோா் வாழ்த்தி பேசினா். மாநிலத் தலைவா் நரசிம்மன் சிறப்புரையாற்றினாா்.

மாவட்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

நீதிமன்றத் தீா்ப்பை காரணம் காட்டி ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பிலுள்ள ஓய்வூதியா்களுக்கான ஓய்வூதியம் மாற்றம் குறித்த பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். தற்போது வழங்கப்படும் மருத்துவப்படியை ரூ.1000-த்திலிருந்து ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் முடக்கப்பட்ட பஞ்சப்படியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, மாவட்டச் செயலா் மதியழகன் வரவேற்றாா். முடிவில், மாவட்டப் பொருளாளா் சந்திரசேகரன் நன்றி கூறினாா்.