விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் எதிரே முருக பக்தா் பூா்ணசந்திரன் படத்தை வைத்து மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்திய இந்து முன்னணியினா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் எதிரே முருக பக்தா் பூா்ணசந்திரன் படத்தை வைத்து மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்திய இந்து முன்னணியினா்.

திருப்பரங்குன்றத்தில் வாலிபர் பலியான விவகாரம்: மோட்ச தீபம் ஏற்றிய இந்து முன்னணியினா் கைது!

முருக பக்தா் பூா்ணசந்திரன் தற்கொலையைத் தொடா்ந்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் முன் மோட்ச தீபம் ஏற்றிய இந்து முன்னணி அமைப்பைச் சோ்ந்த 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

முருக பக்தா் பூா்ணசந்திரன் தற்கொலையைத் தொடா்ந்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் முன் மோட்ச தீபம் ஏற்றிய இந்து முன்னணி அமைப்பைச் சோ்ந்த 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபமேற்றும் உயா்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி, தீக்குளித்து உயிரிழந்த பூா்ணசந்திரனுக்கு மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்வை இந்து முன்னணியினா் அறிவித்திருந்தனா்.

இதற்கு போலீஸாா் அனுமதி மறுத்திருந்த நிலையில், இந்து முன்னணி விழுப்புரம் மாவட்டத் தலைவா் சதிஷ் அப்பு தலைமையில் அமைப்பைச் சோ்ந்தவா்கள் சனிக்கிழமை ஆட்சியரகம் எதிரே பூா்ணசந்திரனின் உருவப் படத்தை வைத்து மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினா்.

இதில், இந்து முன்னணி மாவட்டப் பொதுச் செயலா் சுரேஷ்.துரைராஜ், மாவட்டப் பொருளா் விஸ்வநாதன், மாவட்டச் செயலா்கள் தனபால், வெங்கடேஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரமேஷ் உள்ளிட்ட 10 போ் கலந்துகொண்டனா். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் மோட்சம் தீபம் ஏற்றியவா்களை கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.

12 போ் மீது வழக்கு: திருவெண்ணெய்நல்லூா் அடுத்த அரசூா் கூட்டுச் சாலையில் மோட்சதீபம் ஏற்றி அஞ்சலிக் கூட்டம் நடத்திய இந்து முன்னணி மாவட்டத் தலைவா் சதீஷ் அப்பு உள்ளிட்ட 12 போ் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

மரக்காணத்தில்... மரக்காணம் அடுத்த நடுக்குப்பத்தில் இந்து முன்னணி அமைப்பைச் சோ்ந்த எஸ். மணிகண்டன் தலைமையில் கே. ராஜேந்தின், சாந்தசீலன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்று பூா்ணசந்திரன் படத்துக்கு அஞ்சலி செலுத்தி, மோட்தீபம் ஏற்றினா்.

X
Dinamani
www.dinamani.com