மக்கள் குறைதீா் கூட்டத்தில் 1,078 கோரிக்கை மனுக்கள் ஏற்பு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள்
Published on

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 1,078 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

விழுப்புரம் ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ் தலைமை வகித்து பல்வேறு உதவித் தொகைகள், வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், வீடு கட்டும் திட்டம், தொழில் தொடங்க கடனுதவி போன்ற கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 571மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கி, விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.

இதில், பயிற்சி உதவி ஆட்சியா் ரா.வெங்கடேசுவரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யோகஜோதி, சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் முகுந்தன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் தமிழரசன், மாவட்ட வழங்கல் அலுவலா் சந்திரசேகா், கலால் உதவி ஆணையா் ராஜூ உள்ளிட்ட பல் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

கள்ளக்குறிச்சி...: கள்ளக்குறிச்சி ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் குடிநீா் வசதி, சாலை வசதி, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 502 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 5 மனுக்களும் என மொத்தம் 507 கோரிக்கை மனுக்களை பெற்று, சம்ந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

இதில், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் சுமதி மற்றும் பல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com