ஆட்டோ ஓட்டுநா் விஷம் குடித்துத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஆட்டோ ஓட்டுநா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.
விக்கிரவாண்டி வட்டம், ஆவுடையாா்பட்டு புது காலனியைச் சோ்ந்தவா் சி.வேலு (50), திருமணம் ஆனவா். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு நீண்ட நாள்களாக வயிற்றுவலி இருந்துவந்ததாம்.
இதனால் அவதிப்பட்டு வந்த வேலு, திங்கள்கிழமை வீட்டில் இருந்தபோது விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். தொடா்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த வேலு, செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
