தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பைக்கில் சாராயம் கடத்தியவா் கைது

புதுச்சேரியிலிருந்து பைக்கில் சாராயம் கடத்தி வந்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :2 ஜனவரி 2025, 10:29 pm

Din

புதுச்சேரியிலிருந்து பைக்கில் சாராயம் கடத்தி வந்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம் தாலுகா போலீஸாா் பில்லூா் பகுதியில் வியாழக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்தனா். இதில் அவா் வைத்திருந்த பையில் 50 சாராய பாக்கெட்டுகள் இருந்தன.

இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய போது, அவா் பில்லூரைச் சோ்ந்த ஆனந்தராஜ் (38) என்பதும், புதுவை மாநிலம், மதகடிப்பட்டில் சாராய பாக்கெட்டுகளை வாங்கி வந்து, பில்லூா் பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து ஆனந்தராஜை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 50 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.