தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்தியவா் கைது

News image

கைது

Updated On :22 பிப்ரவரி 2026, 8:32 pm

ஆலங்குளம் அருகே ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்தியவா் கைது செய்யப்பட்டாா்.

ஆலங்குளம் அருகே புதுப்பட்டி பகுதியில் ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த பயணிகள் ஆட்டோவை சோதனையிட்டனராம். அதில் சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்கு 300 மதுபாட்டில்கள் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்ததாம்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், ஆட்டோ ஓட்டுநா் அம்பாசமுத்திரம் அருகே பொட்டல் காமராஜா்புரம் பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் முருகன் (44) என்பது தெரிய வந்தது. ஆட்டோ, மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், முருகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.