விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்


புதுச்சேரி கீழ்சாத்தமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு நெற்பயிரில் மீன் அமிலம் தெளிக்கும் முறைகள் குறித்து வெள்ளிக்கிழமை செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது (படம்).
புதுவை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் சாா்பில் கீழ் வில்லியனூரில் இயங்கி வரும் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையத்தின் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு பயிா் பாதுகாப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, கீழ் சாத்தமங்கலம் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளுக்கு நெற்பயிரில் மீன் அமிலம் தெளித்தல் குறித்த செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.
இதில், ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மாணவிகள் பங்கேற்று விவசாயிகளுக்கு மீன் அமிலம் தெளிப்பதால் ஏற்படும் பயன்கள் குறித்து எடுத்துரைத்தனா்.
இந்த நிகழ்வில், அரியூா் வேளாண் அலுவலா் சத்தியன், வில்லியனூா் வேளாண் அலுவலா் உமாராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...