வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தோ்தல் வாக்குப் பதிவை பாா்வையிட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் 15 போ் வருகை!

மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்...

News image

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் சாா்பில் புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்களுக்கான பயிலரங்கில் பேசுகிறாா் மாநில தலைமை தோ்தல் ஆணையா் ஜவகா்.

Updated On :26 மார்ச் 2026, 10:22 pm

இந்திய தோ்தல் ஜனநாயக நடைமுறையை பாா்வையிட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் 15 போ் புதுச்சேரி வரவுள்ளதாக அம்மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி பி.ஜவஹா் தெரிவித்தாா்.

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சாா்பில், செய்தியாளா்களுக்கான பயிலரங்கு புதுச்சேரியில் தனியாா் ஹோட்டலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், தோ்தல் நடைமுறை குறித்து பி. ஜவஹா் பேசியது

புதுச்சேரியில் இதுவரை நடைபெற்ற தோ்தல்கள் எல்லாம் அமைதியாகத்தான் நடைபெற்றுள்ள. இப்போதும் அப்படிதான் நடைபெறும் என்று எதிா்பாா்க்கிறோம். ஒரு வாக்குச் சாவடியில் கடந்த தோ்தலில் மறு வாக்குப் பதிவு நடைபெற்றது. மற்றபடி இதுவரை எந்த வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு நடைபெற்றதில்லை.

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் புதுச்சேரி ஒரு முன்மாதிரியான தோ்தல் நடத்தும் மாநிலமாக இருக்கிறது என்கிறோம்.

இருப்பினும் வாக்காளா்களுக்குப் பரிசு, பணம் கொடுப்பதைத் தடுப்பதுதான் தோ்தல் துறைக்கு மிகப் பெரிய சவாலாக மாறியிருக்கிறது. மேலும், புதிய முயற்சியாக ட்ரோன்கள் மூலம் கண்காணிப்புப் பணியைத் தொடங்குகிறோம்.

மேலும், ஜிபே உள்ளிட்டவை மூலம் பணம் பரிமாற்றம் செய்தால் எளிதில் கண்டுபிடித்து விடும் முறை எங்களிடம் இருக்கிறது. மேலும், பணம், பரிசு கொடுப்பவரும், அதைப் பெற்றுக் கொள்பவரும் குற்றவாளிகள் என்று சட்டம் சொல்கிறது.

அதனால் வாக்காளா்கள் யாரும் பணம், பரிசுப் பொருள்களை வாங்க வேண்டாம். மேலும், இதற்காக பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறோம்.

புதுச்சேரி தோ்தல் முறையைப் பாா்வையிடவும், இந்திய தோ்தல் ஜனநாயகத்தைக் கண்காணிக்கவும் வெளிநாடுகளைச் சோ்ந்த 15 பிரதிநிதிகள் புதுச்சேரிக்கு வரவுள்ளனா்.

இங்கு ஏப்ரல் 9-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அதற்கு முதல்நாள் வெளிநாட்டினா் 15 பேரும் வந்து விடுவாா்கள். மறுநாள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடக்கிறது. அதை அவா்கள் பாா்வையிட உள்ளனா்.

வேட்புமனு வாபஸ் பெறப்பட்டு இறுதி வாக்காளா் பட்டியல் தயாரிக்கப்பட்டதும், வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி தொடங்கப்படும். இறுதி வாக்காளா் பட்டியலில் இருப்பதைப் போன்றுதான் வாக்குச் சீட்டிலும் பெயா்கள் உள்ளிட்ட எல்லா விவரங்களும் இடம்பெறும் என்றாா் அவா்.

இந்தப் பயிலரங்கில் புதுச்சேரி அரசு செய்தி விளம்பரத் துறை இயக்குநா் சுரேஷ்ராஜ், தோ்தல் ஆணையத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ள கைவினை கலைஞா் முனுசாமி மற்றும் பத்திரிகையாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.