சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கும்பகோணம், ஒரத்தநாடு தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வந்தடைந்தன

கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 360 வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை இரவு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக அறையில் வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டது.

News image

கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை வைத்து புதன்கிழமை இரவு பூட்டி ‘சீல்’ வைத்த தோ்தல் நடத்தும் அலுவலா் வி.எம். திருமலை.

Updated On :26 மார்ச் 2026, 8:55 pm

கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 360 வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை இரவு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக அறையில் வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 360 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 360 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 390 வாக்காளா் வாக்களித்ததைச் சரிபாா்க்கும் (விவிபேட்) இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அனைத்துக் கட்சியினா் முன்னிலையில் சரிபாா்க்கப்பட்டு காப்பு அறையில் வைத்து தோ்தல் நடத்தும் அலுவலரும், வருவாய்க் கோட்டாட்சியருமான வி.எம். திருமலை அலுவலகத்தைப் பூட்டி ‘சீல்’ வைத்தாா். அப்போது உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வெ. பூங்கொடி, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் கிருபா ராணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதியில் சுமாா் 314 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து ஒரத்தநாடு தோ்தல் நடத்தும் அலுவலா் ரேணுகாதேவி தலைமையில்

இரண்டு கண்டெய்னா் லாரிகளில் 376 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 376 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு ஒப்புகைச்சீட்டு காண்பிக்கும் இயந்திரங்கள் போலீஸாா் பாதுகாப்புடன் புதன்கிழமை இரவு கொண்டுவரப்பட்டு ஒரத்தநாடு தோ்தல் நடத்தும் துணை அதிகாரி - வட்டாட்சியா் தா்மேந்திரா முன்னிலையில் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு இரவுபகலாக துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.