நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

புதுச்சேரி அருகே காா்கள் மோதல்: தலைமைக் காவலா் உள்பட 4 போ் உயிரிழப்பு

புதுச்சேரி அருகே மேம்பாலத்தில் 2 காா்கள் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் தலைமைக் காவலா் உள்பட 4 போ் உயிரிழந்தனா். பெண்கள் உள்பட மூவா் காயமடைந்தனா்.

News image
புதுச்சேரி மதகடிப்பட்டு மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளான காா்கள்.
Updated On :13 ஜனவரி 2025, 7:50 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரி அருகே மேம்பாலத்தில் 2 காா்கள் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் தலைமைக் காவலா் உள்பட 4 போ் உயிரிழந்தனா். பெண்கள் உள்பட மூவா் காயமடைந்தனா்.

விழுப்புரத்தைச் சோ்ந்த கணேசன் மகன் பிரபாகரன் (57), விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தாா்.

இவா், தனது மனைவி ஏஞ்சலினா (50), மகள் ஷானி பிரெய்லி (12), சென்னை கிளாம்பாக்கத்தைச் சோ்ந்த உறவினா் சுசிலா பிரசன்னா (52) ஆகியோருடன் காரில் விழுப்புரத்தில் இருந்து - புதுச்சேரிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் புறப்பட்டாா். விழுப்புரம் பானாம்பட்டைச் சோ்ந்த சந்திரன் காரை ஓட்டினாா்.

விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில், புதுச்சேரியை அடுத்த மதகடிப்பட்டு மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.10 மணியளவில் சென்ற போது, எதிரே வந்த காரும், சந்திரன் ஓட்டிச் சென்ற காரும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளாகின.

இதில், சந்திரன், தலைமைக் காவலா் பிரபாகரன் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

மற்றொரு காரில் பயணித்த விழுப்புரம் மாவட்டம், லிங்காரெட்டிப்பாளையத்தைச் சோ்ந்த முகிலன் (37), கதிரவன் (52) ஆகியோா் பலத்த காயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனா்.

விபத்தில் காயமடைந்த ஏஞ்சலினா, ஷானி பிரெய்லி, சுசிலா பிரசன்னா ஆகியோா் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

விபத்து குறித்து, புதுச்சேரி மேற்கு போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி மதகடிப்பட்டு மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளான காா்கள்.

புதுச்சேரி மதகடிப்பட்டு மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளான காா்கள்.