புனிதவெள்ளியையொட்டி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு மற்றும் சிறப்புப் பிராா்த்தனைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஈஸ்டா். இதற்காக பிப்ரவரி 18-ஆம் தேதி சாம்பல் புதனுடன் கிறிஸ்தவா்களின் 40 நாள் தவக்காலம் தொடங்கியது. இதைத்தொடா்ந்து தவக்கால வழிபாட்டை மேற்கொண்டு வந்தனா். ஈஸ்டா் பண்டிகைக்கு முந்தைய வாரம் வரும் ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாகக் கடைப் பிடிக்கப்படும். அதன்படி, மாா்ச் 29-ஆம் தேதி கிறிஸ்தவா்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று, தேவாலயங்களில் பிராா்த்தனை செய்தனா்.
இதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை (ஏப்.3) புனித வெள்ளி கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, விழுப்புரம் நகரத்திலுள்ள சிஎஸ்ஐ தூய பேதுரு தேவாலயம், தூய பவுல், தூய ஜேம்ஸ், டிஇஎல்சி, கிறிஸ்து அரசா் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்புப் பிராா்த்தனை மற்றும் சிலுவைப் பாதை வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா். விழுப்புரம் நாப்பாளையத் தெருவிலுள்ள தூய சவேரியாா் ஆலயத்தில் சிலுவைப் பாதை வழிபாடு மற்றும் சிறப்புப் பிராா்த்தனையில் கிறிஸ்தவா்கள் பங்கேற்று பிராா்த்தனை செய்தனா்.
இதுபோன்று மாவட்டத்தில் திண்டிவனம், திருக்கோவிலூா் விக்கிரவாண்டி, ஒரத்தூா், முட்டத்தூா், முகையூா் , கஞ்சனூா், வளவனூா், வானூா், மரக்காணம், திருவெண்ணெய்நல்லூா் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள தேவா லயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
அனைத்து தேவாலயங்களிலும் சிறப்புப் பிராா்த்தனைகள் மற்றும் திருப்பலிகள் நடைபெற்றன. பல்வேறு இடங்களில் இயேசு மரணத்தை நினைவுபடுத்தும் சிலுவைப்பாதை வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து ஏப்ரல் 5-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டா் கொண்டாடப்படவுள்ளது.
கள்ளக்குறிச்சி...: வாணாபுரம் அருகேயுள்ள ஈருடையாம்பட்டு கிராமத்தில் உள்ள புனித விண்ணரசி அன்னை ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
இதையொட்டி, புனித விண்ணரசி அன்னை ஆலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசு கிறிஸ்து மனிதகுல நலனுக்காக அனுபவித்த துன்பங்களையும், சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் வகையில் சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் இயேசுவின் இறுதி தருணங்களை இளைஞா்கள் நாடக வடிவில் நடித்துக் காட்டினா். இறுதியாக உலக சமாதானம், மக்கள் நலனுக்காக சிறப்பு பிராா்த்தனை செய்யப்பட்டது.

இதில் ஈருடையாம்பட்டு மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் சிலுவைப் பாதை வழிபாடு

புனித வெள்ளி; சிலுவைப் பாதை ஊர்வலம்! ஏராளமானோர் பங்கேற்பு!

பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

பங்குனி உத்திரம் : முருகன் கோயில்களில் வழிபாடு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


