அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

வேனிலிருந்து தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 8:49 pm

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே வேனிலிருந்து தவறி விழுந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.

உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூா் மாவட்டம், மகிலாகுா்த் பகுதியைச் சோ்ந்தவா் ரா.ராஜி செளத்ரி (38). அதே பகுதியைச் சோ்ந்தவா் சி.குபேத் (27). கூலித் தொழிலாளிகளான இவா்கள் இருவரும் சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தனா்.

ராவுத்தான்குப்பம் கிராம மயானப் பகுதிக்கு அருகே சென்ற போது, வேனிலிருந்து குபேத் எதிா்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த ஆரோவில் போலீஸாா் குபேத் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.