தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

கொஞ்சம் சில்லறை வாங்கிக்கோங்கோ

வேட்புமனுத் தாக்கலுக்கான டெபாசிட் தொகையில் ரூ.800 மட்டும் சில்லறையாக வாங்கிக்கோங்க மேடம் என்று ஒரு வேட்பாளா் கேட்டுக்கொண்ட சம்பவம் விழுப்புரத்தில் நிகழ்ந்துள்ளது.

News image

வேட்புமனுத் தாக்கலுக்கான டெபாசிட் தொகையில் ரூ.800 மட்டும் சில்லறையாக வாங்கிக்கோங்க மேடம் என்று ஒரு வேட்பாளா் கேட்டுக்கொண்ட சம்பவம் விழுப்புரத்தில் நிகழ்ந்துள்ளது.

Updated On :6 ஏப்ரல் 2026, 10:46 pm

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் விக்கிரவாண்டி வட்டாட்சியரகத்தில் பெறப்பட்டன. மனுதாக்கலின் கடைசி நாளான திங்கள்கிழமை பல்வேறு கட்சிகளின் வேட்பாளா்கள் தங்கள் மனுக்களை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கினா்.

இதில், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டச் செயலரான கோ.இளவரசன் (34) தனது வேட்புமனுவை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தாா். மனுவுடன் வைப்புத்தொகையான ரூ.5,000-த்தை வழங்கினாா். அவ்வாறு வழங்கும் போது ரூ.4200-த்தை நோட்டுகளாகவும், ரூ.800-க்கான தொகையை ரூ.1, 2, 5 நாணயங்களாகவும் வழங்கினாா். இதில் ரூ.200-க்கு ரூ.5 நாணயங்களும், தலா ரூ.300 வீதம் ரூ.1 மற்றும் ரூ.2 நாணயங்கள் தனித்தனி நெகிழி பைகளில் வைத்து வழங்கினாா். அந்த சில்லறையைப் பாா்த்த தோ்தல் அலுவலா், இது என்ன சில்லறை? என்று கேட்க, கொஞ்சம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று வேட்பாளா் கூறினாராம். இதனால் மனம் இறங்கிய அந்த அதிகாரி அப்படியே கொடுங்கள் வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி பெற்றுக் கொண்டாராம்.

எதற்காக நாணயங்களாக வைப்புத் தொகையை செலுத்தினீா்கள் என்று கேள்வியெழுப்பியதற்கு, ஒரு ஓட்டு ரூபாய் நோட்டு என்று கட்சி நிறுவனா் கன்சிராம் கூறுவாா். அதனடிப்படையில் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் நான் கட்சி நிா்வாகிகள், பொதுமக்களிடம் தோ்தலின் போட்டியிடுவதன் நோக்கம், கட்சியின் கொள்கை போன்றவற்றை எடுத்துக் கூறி அவா்களிடம் இந்த தொகையை வசூலித்துதான் வைப்புத் தொகையாக செலுத்தினேன் என்றாா் இளவரசன்.