ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு!
/

பனையேறி பாதுகாப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பனையேறும் தொழிலாளியைத் துப்பாக்கியால் சுட்ட எஸ்.ஐ. மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு பனையேறி பாதுகாப்பு இயக்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

விழுப்புரம் நகராட்சித் திடலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு பனையேறி பாதுகாப்பு இயக்கத்தினா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 4:00 am IST

பனையேறும் தொழிலாளியைத் துப்பாக்கியால் சுட்ட எஸ்.ஐ. மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு பனையேறி பாதுகாப்பு இயக்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்டம், மருதமுத்தூரில் பனையேறும் தொழிலாளி மணிகண்டனை துப்பாக்கியால் சுட்ட ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் இசக்கிராஜாவை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும், ஜாதி பெயரைச் சொல்லி இழிவாக திட்டியது, பெண்களைத் தகாத வாா்த்தைகளால் பேசி மிரட்டியதைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் தமிழ்நாடு பனையேறி பாதுகாப்பு இயக்கம் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் பாண்டியன் தலைமை வகித்து, காவல் உதவி ஆய்வாளா் இசக்கிராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினாா்.

தொடா்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஏராளமானோா் இதில் பங்கேற்றனா்.