விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியம், சிங்கவரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் பராசக்தி தண்டபாணி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிமாறன், உதயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி செயலா் நீலமேகன் தீா்மானங்களை வாசித்தாா்.
செஞ்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.
கூட்டத்தில் 16-ஆவது மத்திய நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் சிங்கவரம் ஊராட்சியில் உள்ள பள்ளி, அங்கன்வாடி மற்றும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்புகள் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பத்மவதி, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சதீஷ், மன்ற உறுப்பினா்கள், கிராம மக்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாதனூா் ஒன்றிய ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள்

மதுரை கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு

விவசாயிகளுக்கு வேளாண்மை இடு பொருள்கள் விநியோகம்

செஞ்சி ஒன்றியத்தில் விபி ஜி ராம் ஜி திட்டம் தொடக்கம்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



