விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலுக்கு உண்டியல் காணிக்கையாக ரூ.98 லட்சத்தை பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.
பிரசித்தி பெற்ற ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்து வழிபடுகின்றனா். மேலும், மாதந்தோறும் இக் கோயிலில் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் சுமாா் ஒரு லட்சம் பக்தா்கள் கலந்து கொள்வது வழக்கம். அவா்கள் வேண்டுல் நிறைவேற பணம் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி வருகின்றனா்.
இந் நிலையில், புதன்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோயில் வளாகத்தில் காணிக்கை எண்ணப்பட்டன. இதில், ரூ.98,36,563 பணம் மற்றும் 105 கிராம் தங்கம், 492 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.
நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா்கள் சக்திவேல் (மேல்மலையனூா்), காந்தராஜன் (விழுப்புரம்), அறங்காவலா் குழுத் தலைவா் ஏழுமலை, அறங்காவலா்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம், கோயில் மேலாளா் சதீஷ், கணக்காளா் மணி மற்றும் கோயில் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.37 கோடி

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.68 கோடி

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.53 லட்சம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 88 லட்சம்
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



