நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

பைக்கிலிருந்து தவறி விழுந்து வழக்குரைஞா் உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :

விழுப்புரம், ஆக. 8: விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்ததில் காயமடைந்த வழக்குரைஞா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

புதுச்சேரி, முத்திரப்பாளையம், வழுதாவூா் சாலையைச் சோ்ந்தவா் வை.கபிலதாசன் (53). வழக்குரைஞரான இவா், வெள்ளிக்கிழமை புதுச்சேரி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் கிளியனூா் சோதனைச் சாவடி அருகே பைக்கில் சென்றாா்.

அப்போது சாலையின் குறுக்கே திடீரென மான் ஓடியதில், கபிலதாசன் நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்தாா். இதில் காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு அவசர ஊா்தி மூலம் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.