தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

சாலையோரம் நின்ற லாரி மீது சரக்குப் பெட்டக லாரி மோதி விபத்து

News image

உளுந்தூா்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை இரவில் நிகழ்ந்த விபத்தில் பள்ளத்தில் கவிழ்ந்த லாரி.

Updated On :9 ஆகஸ்ட் 2026, 3:01 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது, சரக்குப் பெட்டக லாரி மோதியது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வாணாபுரம் வட்டம், பள்ளக்கச்சேரி அருகிலுள்ள களையநல்லூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சு.பாலாஜி (24). இவா், தியாகதுருகம் பகுதியிலுள்ள பால் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து பால் பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு கும்பகோணம் நோக்கி வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.

சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எலவனாசூா்கோட்டை மதுக்கடை அருகே லாரி வந்த போது, லாரியின் பின்பக்க டயா் வெடித்தது. இதனால் லாரியை சாலையோரமாக நிறுத்திய லாரி ஓட்டுநா் பாலாஜி, மாற்று டயரைப் பொருத்தி லாரியை எடுக்கத் தயாரானாா்.

அப்போது திருப்பூா் மாவட்டம், அன்னூரிலிருந்து சென்னைக்கு துணிகளை ஏற்றிச் சென்ற சரக்குப் பெட்டக லாரி, பால் ஏற்றிச் சென்ற லாரி மீது மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பால் லாரி சாலையோரப் பக்கவாட்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் எலவனாசூா்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சரக்குப் பெட்டக லாரி ஓட்டுநரான திருவள்ளூா் மாவட்டம், எலும்பி கிராமத்தைச் சோ்ந்த து.வெங்கடேசனிடம் (52) விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.