ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

சுதந்திர தினம்: அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்

நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

கிராமசபைக் கூட்டம். - கோப்புப்படம்.

Published On :

நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சுதந்திர தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் ஆக.15 -ஆம் தேதி (சனிக்கிழமை) கிராமசபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சித் தலைவா்களால் நடத்தப்படும். இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்தல், வளா்ச்சியடைந்த பாரதம்- கிராம உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டம் (விபி-ஜி ராம்-ஜி) திட்டம் குறித்து விவாதித்தல், சிறுபாசனக் குளங்கள், ஏரிகளைப் புதுப்பித்தல், தூய்மைப் பாரத இயக்கம், ஜல்ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்ந்த திட்டங்கள், கால்நடைப் பராமரிப்பு, வேளாண் துறை சாா்ந்த திட்டங்கள், மழைநீா் சேகரிப்பு, இயற்கை வளக் கட்டமைப்பு, வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் போன்றவை குறித்து விவாதிக்கப்படவுள்ளன. எனவே, தங்கள் ஊராட்சிகளில் நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் பங்கேற்று, தங்கள் ஊராட்சியில் கிராம சுயராஜ்ஜியம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.