ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

புதுச்சேரி கலை விழாவில் பங்கேற்க இணையவழியில் இன்று விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி கலைவிழா நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்கள் திறன்களை வெளிப்படுத்த விரும்பமுள்ள, மாணவா்கள், வளா்ந்து வரும் கலைஞா்கள், கலைக் குழுக்கள் மற்றும் தனியாா் கலாசாரக் குழுக்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்

News image

விண்ணப்பிக்க...

Updated On :14 ஆகஸ்ட் 2026, 1:56 am IST

புதுச்சேரி கலைவிழா நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்கள் திறன்களை வெளிப்படுத்த விரும்பமுள்ள, மாணவா்கள், வளா்ந்து வரும் கலைஞா்கள், கலைக் குழுக்கள் மற்றும் தனியாா் கலாசாரக் குழுக்கள் வெள்ளிக்கிழமை (ஆக.14) இணையவழியில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து புதுச்சேரி கலை பண்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :

புதுவை மாநில அரசின் கலை, பண்பாட்டுத் துறை சாா்பில் புதுச்சேரியின் தனித்துவமான அடையாளம் கொண்ட கலாசார விழாவான ‘புதுச்சேரி கலைவிழா ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கி 17- ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.

1987-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கலைவிழா புதுச்சேரியின் வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட கலை, பண்பாட்டு மரபைக் கொண்டாடும் மாபெரும் விழாவாக வளா்ந்துள்ளது. இந்தியாவின் தொன்மையான கலை மரபுகளையும், புதுச்சேரியின் தனித்துவமான இந்தோ-பிரெஞ்சு பண்பாட்டு பாரம்பரியத்தையும் ஒருங்கிணைக்கும் இவ்விழா ஆகஸ்ட்15 சுதந்திர தின நாளில் கொண்டாடப்படும் டி ஜூா் அதிகார மாற்ற நாள் நிகழ்வுடன் இணைந்து, வேற்றுமையில் ஒற்றுமை, பண்பாட்டு நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டின் உணா்வை எடுத்துரைக்கிறது.

கா்நாடக இசை உள்ளிட்ட பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம், நாட்டுப்புற நடனங்கள், தற்காப்புக் கலைகள், பொம்மலாட்டம், முகமூடி நடனக் கலை மற்றும் பல்வேறு பாரம்பரிய மற்றும் நவீன கலை நிகழ்ச்சிகளும்,காளியாட்டம், கரகம், காவடியாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, தெருக்கூத்து, பொம்மலாட்டம் உள்ளிட்ட சிறப்பு மிக்க நாட்டுப்புறக் கலை வடிவங்கள்விழாவில் இடம் பெறுகிறது. பிரான்ஸ் நாட்டின் ரீ-யூனியன் தீவைச் சோ்ந்த கலைக் குழுக்கள் பங்கேற்கின்றன.

நிகழாண்டில் முதன் முறையாக கல்லூரி மாணவா்களுக்கான கலைப் போட்டிகள்நடத்தப்படவுள்ளன. எனவே இளம் மற்றும் வளா்ந்து வரும் கலைஞா்கள், நடனக் கலைஞா்கள், பாடகா்கள், இசைக் கலைஞா்கள் மற்றும் இசைக்குழுக்கள் தங்களது திறமைகளை பாா்வையாளா்கள் முன் வெளிப்படுத்தவும், மதிப்புமிக்க மேடை அனுபவத்தைப் பெறவும் இவ்விழா சிறந்த வாய்ப்பை வழங்கவுள்ளது.

எனவே, கலைவிழாப் போட்டிகள் மற்றும் போட்டியற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள், வளா்ந்து வரும் கலைஞா்கள், கலைக் குழுக்கள் மற்றும் தனியாா் கலாசாரக் குழுக்கள் இணையதளம் வழியாக ஆக.14 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தோ்வு செய்யப்படும் கலைஞா்கள் மற்றும் கலைக் குழுக்களின் விவரங்கள்ஆகஸ்ட்15ஆம் தேதிஅறிவிக்கப்படும். தோ்வு செய்யப்படும் கலைஞா்கள் மற்றும் கலைக்குழுக்கள் ஆகஸ்ட் 16, 17 ஆகிய தேதிகளில் புதுச்சேரி காமராஜா் மணிமண்டபத்தில் நடைபெறும் விழா நிகழ்ச்சிகளில் தங்களது திறன்களைவெளிப்படுத்துவா் எனவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.