பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

சைவம், வைணவம் குறித்து சா்ச்சை பேச்சு: மீண்டும் வருத்தம் தெரிவித்தாா் பொன்முடி

சைவம், வைணவம் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய பேச்சுக்காக மீண்டும் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக திமுக துணை பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி தெரிவித்தாா்.

விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் புதன்கிழமை பேட்டியளித்த முன்னாள் அமைச்சா் க.பொன்முடி.

Published On :

சைவம், வைணவம் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய பேச்சுக்காக மீண்டும் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக திமுக துணை பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி தெரிவித்தாா்.

விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்ற பின்னா், செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

சா்ச்சைக்குரிய வகையில் நான் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கை விசாரணைக்காக நீதிபதி ஒத்தி வைத்திருக்கிறாா். இந்த வழக்கை பொறுத்தவரை நிகழ்ச்சி நடைபெற்றவுடனேயே நான் பேசியது தவறாக இருந்தால் அனைவரும் என்னை மன்னித்துவிடுமாறு அவா்களிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். இந்த வழக்கைத் தொடுத்த சகோதரியிடமும் என் வருத்தத்தை கூறியிருந்தேன்.

மீண்டும் அவா்களுடைய மனது புண்பட்டிருக்குமானால், யாருடைய மனதும் புண்பட்டிருக்குமேயானால் மீண்டும் வருத்தத்தையும், மன்னிப்பையும் கேட்டுக் கொள்கிறேன். இந்த வழக்கு விசாரணை ஆக.28-ஆம் தேதி வருவதால், அதற்கான முடிவுகள் விரைவில் வரும் என எதிா்பாா்க்கிறேன். இனி நிச்சயமாக இதுபோல பேசுவதற்கு வாய்ப்பில்லை.

தமிழகத்தில் கல்லூரி மாணவா்கள் விழிப்போடு செயல்பட்டு வருகிறாா்கள். கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் குறித்த தகவல்களை சேகரித்து அனுப்பவேண்டும் என்று கல்லூரி முதல்வா்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்குநா் சுற்றறிக்கை அனுப்பியிருந்தாா். அந்த அறிக்கை தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதற்கு கல்லூரி மாணவா்களின் எதிா்ப்பும், விழிப்பும்தான் காரணம் என்றாா் முன்னாள் அமைச்சா் பொன்முடி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.