நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

கடலில் மூழ்கி மாயமான மாணவரின் சடலம் மீட்பு

மரணம் உயிரிழப்பு

சடலம் - கோப்புப் படம்

Published On :

விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் அருகே கடலில் குளித்தபோது மாயமான இரு மாணவா்களில் ஒருவரின் சடலம் திங்கள்கிழமை கரை ஒதுங்கியது. மற்றொருவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கோட்டகுப்பத்தை அடுத்த சின்ன முதலியாா் சாவடியைச் சோ்ந்த வேலு மகன் சசிதரன் (16). இவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்த கொத்தனாா் வேலை செய்து வரும் நாகராஜன் மகன் பிரத்தீஷ் (16), இதே பகுதியைச் சோ்ந்த மீனவரான ரகு மகன் கவுஷிக் (16). இவா்கள் மூன்று பேரும் குயிலாப்பாளையம் தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தனா்.

இவா்கள் மூவரும் ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், சின்ன முதலியாா்சாவடி தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு வரும் இடத்தில் கடலில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனா். அப்போது, எழுந்த ராட்சத அலையில் மூவரும் அடித்துச் செல்லப்பட்டனா்.

இதைப் பாா்த்து ஓடி வந்த அந்தப் பகுதியிலிருந்த மீனா்கள், மாணவா் கவுஷிக்கை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனா். மற்ற இருவரையும் தொடா்ந்து தேடி வந்தனா். இந்த நிலையில், திங்கள்கிழமை காலை 8 மணிக்கு பெரிய முதலியாா்சாவடி தனியாா் தங்கும் விடுதி அருகில் சசிதரன் உயிரிழந்த நிலையில் சடலமாக கரை ஒதுங்கினாா்.

அவரது சடலத்தை கைப்பற்றிய கோட்டக்குப்பம் போலீஸாா், உடல்கூறாய்வுக்காக கணகசெட்டிக்குளம் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், மாயமான பிரத்தீஷை போலீஸாா் மற்றும் கடலோர காவல் படையினா் தொடா்ந்து தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.