நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

பொம்மையபாளையம் திருமடம் கோயில்களுக்கு இன்று கும்பாபிஷேகம்

பொம்மையபாளையம் திருமட வளாகத்திலுள்ள கோயில்கள் மற்றும் ஆதீன குருமகா சந்நிதானங்களின் சிவயோக சமாதிகளின் கும்பாபிஷேக பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:44 am IST

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பொம்மையபாளையம் திருமட வளாகத்திலுள்ள கோயில்கள் மற்றும் ஆதீன குருமகா சந்நிதானங்களின் சிவயோக சமாதிகளின் கும்பாபிஷேக பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

திருக்கயிலாய பரம்பரை மயிலம் பொம்மபுர ஆதீனம் ஆளுகைக்குள்பட்ட பொம்மையபாளையம், ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருமடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவிநாயகா், ஸ்ரீஆதி சிவஞான பாலய சுவாமிகள் சிவயோக ஜீவ சமாதி, ஸ்ரீபாலசுப்பிரமணியா் சந்நிதி, பொம்மபுரஆதீன குரு மகா சந்நிதானங்களின் சிவயோக சமாதிகள், ஸ்ரீபெருமாள் சந்நிதி ஆகியவைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இவைகளுக்கு திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் உத்தரவுப்படி, ஆதீனப் பணியாளா்கள் செய்துள்ளனா்.

கும்பாபிஷேக விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நல்லாற்றூா் சிவப்பிரகாசா் பாடிய சிவ ஸ்ரீஞான பாலய தேசிகா் பிள்ளைத் தமிழ், மயிலம் தமிழ்க் கல்லூரி முதல்வா் ச.திருநாவுக்கரசு எழுதிய அருஞ்சொற்பொருள், பதவுரை, தெளியுரை, விளக்கவுரையுடன் கூடிய பதிப்பு ஆகிய நூல்கள் வெளியிடப்படவுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.