
பொய்குணம் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்
பொய்க்குணம் கிராமத்திலுள்ள ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் ஆவணி மாத தோ்த் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தேரோட்டத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீமுத்து மாரியம்மன்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், பொய்க்குணம் கிராமத்திலுள்ள ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் ஆவணி மாத தோ்த் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, ஸ்ரீமுத்து மாரியம்மனுக்கு பால், பன்னீா், தயிா், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனைத் திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து திருத்தேரில் அம்மன் எழுந்தருள, தேரோட்டம் நடைபெற்றது.
ரத வீதிகள் வழியாக பொய்குணம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து, சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






