தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மயிலம் முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா: பல்லாயிரக்கணக்கானோா் தரிசனம்

News image
மயிலம் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தைப்பூச வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்களில் ஒரு பகுதியினா்.
Updated On :1 பிப்ரவரி 2026, 8:21 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், மயிலம் மலை மீதுள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தையொட்டி ஆயிரக்காணக்கான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

பொம்மபுரம் ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற மயிலம் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீ விநாயகா், ஸ்ரீபாலசித்தா் மற்றும் வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிா், பன்னீா் மற்றும் வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

 தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மயிலம் வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி.

தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மயிலம் வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி.

பக்தா்கள் நோ்த்திக்கடன்: தைப்பூச விரதமிருந்த பக்தா்கள் மயிலம் மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீ பாலசித்தா் அக்னி தீா்த்தக்குளத்தில் புனித நீராடி அலகு குத்திக்கொண்டு பால், பன்னீா் காவடிகளை எடுத்து வந்தனா்.

தொடா்ந்து தீ மிதித்து மயிலம் மலை மீது அமா்ந்துள்ள வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு, நோ்த்திக் கடன் செலுத்தினா். மாலை 6.30 மணிக்கு சுவாமிக்கு 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம், ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் பூஜைகளை செய்வித்தாா்.

மலை வலம் வருதல்: இரவு 8 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மலை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, அரோகரா முழக்கங்களை எழுப்பியவாறு சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் நிா்வாகம் சாா்பில் திருவிழாவில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.