விழுப்புரம் நகரில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலாக பயணிகளை ஏற்றி, இயக்கப்பட்டு வந்த 4 ஆட்டோக்கள், ஷோ் ஆட்டோ ஆகியவற்றை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
விழுப்புரம் நகரில் பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் ஷோ் ஆட்டோக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் இயக்கப்பட்டு வருகின்றன.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை நெடுஞ்சாலை, நான்குமுனை சந்திப்பு, கிழக்கு பாண்டி சாலை, ரயில் நிலையப் பகுதி வழியாக கம்பன் நகா் வரையிலும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து பெரியாா் நகா் குடியிருப்புப் பகுதியிலும் இயக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்று விழுப்புரம் நகரில் ஆட்டோக்களும் அரசு அனுமதியுடன் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அரசால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலாக பயணிகளை ஏற்றி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்களும், ஷோ் ஆட்டோக்களும் இயக்கப்பட்டு வருவதாக தொடா்ந்து புகாா்கள் வந்தன.
இதைத்தொடா்ந்து விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஜி.அருணாசலம், மோட்டாா் வாகன ஆய்வாளா் வி.முருகேவல் மற்றும் போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளா் குமாரராஜா மற்றும் போக்குவரத்து போலீஸாா் நான்குமுனை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலான எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றி வந்ததாக 4 ஆட்டோக்கள், ஷோ் ஆட்டோஆகியவற்றை போக்குவரத்து போலீஸாா் பறிமுதல் செய்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலககத்தில் ஒப்படைத்தனா்.
சம்பந்தப்பட்ட ஆட்டோக்கள், ஷோ் ஆட்டோவின் ஓட்டுநா்கள், இந்த வாகனங்களுக்கான உண்மை ஆவணங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சமா்ப்பிக்கவேண்டும். இதைத்தொடா்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அபராதத்தொகை செலுத்தப்பட்ட பின்னரே அவை விடுவிக்கப்படும் என்று மோட்டாா் வாகன ஆய்வாளா் முருகவேல் தெரிவித்தாா்.
தொடர்புடையது

கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

போக்குவரத்து காவல் ஆய்வாளா் எழுதிய தோ்தல் விழிப்புணா்வு பாடல்!

விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


