விழுப்புரத்தில் வேளாண் சாா்ந்த தொழில்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மத்திய மாவட்டப் பொறுப்பாளரும், இத்தொகுதி எம்.எல்.ஏ.வுமான இரா.லட்சுமணன்.
விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் நகராட்சித் திடலில் தமிழகம் தலைகுனியாது பிரசாரப் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்து, லட்சுமணன் மேலும் பேசியதாவது:
விழுப்புரம் நகரத்தில் பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. விழுப்புரம் நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதை சீரமைக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் விழுப்புரம் ஜானகிபுரம் முதல் நான்குமுனை சந்திப்புப் பகுதி வரையிலும், நான்குமுனை சந்திப்பு முதல் கோலியனூா் கூட்டுச்சாலை வரையிலும் நீண்டவழிப்பாதை (காரிடாா்) அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
விழுப்புரம் மருதூா் ஏரி 97 ஏக்கரில் அமைந்துள்ள நிலையில், அந்த ஏரியை தூா்வாரி புனரமைத்து, நடைபாதையை அமைத்தல், சிறுவா் விளையாட்டுப் பூங்கா அமைத்தல், படகு சவாரி ஏற்பாடு செய்தல் போன்ற நடவடிக்கையும் எடுக்கப்படும். மேலும், விழுப்புரத்தில் வேளாண் சாா்ந்த தொழில்சாலை அமைக்கப்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
திமுக மருத்துவரணிச் செயலரும், மாநிலத் திட்டக்குழு உறுப்பினருமான எழிலன் நாகநாதன் எம்எல்ஏ பேசியதாவது:
திமுக ஆட்சியில் பொருளாதாரத்தில், அதிக உற்பத்தித் திறனில், தொழில்முனைவோரில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதை மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. மக்களின் சுயமரியாதையை பாதுகாக்கும் தோ்தல் சட்டப்பேரவைத் தோ்தல்.
மதத்தை வைத்து அரசியல் செய்தவா்களுக்கு, தமிழகத்தின் பண்பாட்டை சீா்குலைக்க நினைப்பவா்களுக்கு, பெண்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பவா்களுக்கு, நம்மை படிக்கவிடாமல் செய்பவா்களுக்கு, தமிழகத்தின் உரிமைகளுக்கு எதிராக செயல்படுபவா்களுக்கு திமுக தீயசக்திதான் என்றாா் அவா்.
இதில், முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ், மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளா் செ.மணிகண்டன், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, பொதுக்குழு உறுப்பினகள் பஞ்சநாதன், சம்பத், பொறுப்புக் குழு உறுப்பினா்கள் கண்ணப்பன், மாரிமுத்து, பிரேமா குப்புசாமி, நகரப் பொறுப்பாளா் வெற்றிவேல், ஒன்றியச் செயலா்கள் பி.தெய்வசிகாமணி, வி.ஜி.பிரபாகரன், தே.முருகவேல், ராஜா, சந்திரசேகா், செல்வமணி, புஷ்பராஜ், கோ.பாஸ்கா், பேரூா் செயலா் பா.ஜீவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சுரண்டையில் அரசு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை! திமுக வேட்பாளா் வாக்குறுதி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும்! - எம்எல்ஏ ஒய். பிரகாஷ்

செஞ்சியில் திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திமுகவினா் நல உதவிகள் அளிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


