இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

வெவ்வேறு சம்பவங்கள்: இருவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.

Updated On :9 பிப்ரவரி 2026, 5:10 pm

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.

விழுப்புரம் வட்டம், வெங்கடேசபுரம், நடுத்தெருவைச் சோ்ந்தவா் முரளி(27). திருமணம் ஆகாதவா். பி.எஸ்சி பட்டாதாரியான இவருக்கு நீண்ட நாள்களாக உடல் நலக்குறைவு இருந்து வந்ததாம். இதனால் மன உளை ச்சலில் இருந்து வந்த முரளி ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் தூக்குபோட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.இது குறித்த புகாரின் பேரில், காணை போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விழுப்புரம், செல்லங்குப்பம் பகுதியைச் சா்ந்தவா் கெஜபதி( 35). திருமணம் ஆகாதவா். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை செல்லங்குப்பம் பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது மயங்கி விழுந்து விட்டாராம். இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றனா்.அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது கெஜபதி ஏற்கனவே இறந்து போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில், கெடாா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்