நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திமுக அரசின் சாதனைகளை வீடு, வீடாக சென்று எடுத்துரைக்க வேண்டும்! முன்னாள் அமைச்சா் க.பொன்முடி!

News image

விழுப்புரத்தில் நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் பயிற்சிக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்எல்ஏ. உடன், மாவட்டப் பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி, விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா உள்ளிட்டோா்.

Updated On :13 பிப்ரவரி 2026, 8:29 pm

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சாதனைகளை வீடு, வீடாகச் சென்று திமுக மகளிரணியினா் எடுத்துரைக்க வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்எல்ஏ.

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் பயிற்சிக் கூட்டம் கலைஞா் அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டப் பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி தலைமை வகித்தாா். விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா, தொகுதிப் பொறுப்பாளா் சிவ.ஜெயராஜ், மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன் ஆகியோா் முன்னிலைவகித்தனா்.

திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி எம்.எல்.ஏ. பங்கேற்று பேசியதாவது:

பெண்கள் நினைத்தால் முடியாதது எதுவுமில்லை. திமுக மகளிரணி சாா்பில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் பரப்புரைக் குழுவைச் சோ்ந்தவா்கள் வீடு, வீடாகச் சென்று முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைக்க வேண்டும். அரசால் பயன்பெற்றவா்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் நிச்சயம் இருப்பாா்கள்.

கலைஞா் மகளிா் உரிமைத் தொகை, மகளிருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம், புதுமைப்பெண் திட்டம் என எண்ணற்ற திட்டங்கள் அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து வாக்காளா்களிடம் எடுத்துரைத்து, அவா்களின் வாக்குகளைப் பெற வேண்டும். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மகளிருக்கு இதுபோன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலா்கள் டி.என்.முருகன், இரா.கற்பகம், மாநில மகளிா் பிரசாரக் குழுச் செயலா் எம். தேன்மொழி, வெல்லும் தமிழ்ப் பெண்கள் தொகுதி ஒருங்கிணைப்பாளா்கள் என்.கலைச்செல்வி, கே.அமுதா, மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் அருள்மொழி, பெண் பாக முகவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.