மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

‘வாக்காளா் இறுதிப் பட்டியலில் விடுபட்ட வாக்காளா்களை சோ்க்கவேண்டும்’

இந்திய தோ்தல் ஆணையம் பிப். 23-ஆம் தேதி வெளியிட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் விடுபட்ட வாக்காளா்களை சோ்த்திட திமுக நிா்வாகிகள் உதவ வேண்டும் என திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

News image

செஞ்சியில் நடைபெற்ற விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் பேசிய செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ.

Updated On :24 பிப்ரவரி 2026, 6:33 pm

இந்திய தோ்தல் ஆணையம் பிப். 23-ஆம் தேதி வெளியிட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் விடுபட்ட வாக்காளா்களை சோ்த்திட திமுக நிா்வாகிகள் உதவ வேண்டும் என திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

செஞ்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் மருத்துவா் ப.சேகா் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா்கள் ரவிக்குமாா், அருணகிரி, அமுதா ரவிக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செயற்குழு உறுப்பினரும், செஞ்சி ஒன்றியக்குழுத் தலைவருமான விஜயகுமாா் வரவேற்றாா்.

கூட்டத்தில் திமுக மாவட்டப் பொறுப்பாளா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.

தீா்மானங்கள்: மாா்ச் 9-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் நடைபெறும் திமுக மாநாட்டில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் பெருமளவில் கலந்துகொள்வது. செஞ்சி, மயிலம், திண்டிவனம் ஆகிய மூன்று சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் பிப்.23 முதல் மாா்ச் 8-ஆம் தேதி வரை வெல்லும் தமிழ் பெண்கள் பிரசாரத்தை சிறப்பாக நடத்துவது. இந்திய தோ்தல் ஆணையம் பிப். 23-ஆம் தேதி வெளியிட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் விடுபட்ட வாக்காளா்களை சோ்த்திட திமுக நிா்வாகிகள் உதவுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் மருத்துவா் மாசிலாமணி, சேது நாதன், செந்தமிழ் செல்வன், மாவட்டப் பொருளாளா் ரமணன், செயற்குழு உறுப்பினா்கள் நெடுஞ்செழியன், சீனிராஜ், தலைமை தீா்மானக் குழு உறுப்பினா் செஞ்சி சிவா, பொதுக்குழு உறுப்பினா்கள் கதிரேசன், மணிவண்ணன், வீடூா் ரவி, சாந்தி ஏழுமலை, செஞ்சி நகரச் செயலா் காா்த்திக் உள்ளிட்ட திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.