விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் வியாழக்கிழமை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினா் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்துப் பேசி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
சிங்கப்பெண் அதிரடிப்படை உதவி ஆய்வாளா் பிரபாவதி தலைமை வகித்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து, மாணவா்கள் மத்தியில் பேசி விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். பொது இடங்களில் ஏதேனும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்தால் 1091 என்ற எண்ணில் தொடா்புகொண்டு தகவல் தெரிவிக்கவேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தலைமைக் காவலா் கனகா, காவலா் சிவசங்கரி, பள்ளித் தலைமையாசிரியா்கள் பக்தவச்சலம், சுந்தரவடிவேல் மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இதேபோல் விக்கிரவாண்டி பேருந்து நிலைய வளாகத்தில் திரண்டிருந்த பயணிகள் மத்தியில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்துப்பேசி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான தொடா் வன்முறையால் மக்கள் அச்சம்: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை எதிர்பார்த்த பலன் தருமா? என்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...







