இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

தொழிலாளி விஷமருந்தி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி உயிரிழந்தாா்.

Suicide

தற்கொலை - தினமணி

Published On :2 ஜூலை 2026, 7:11 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், மதுரப்பாக்கம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் க.விநாயகமூா்த்தி(51), தொழிலாளி. இவருக்கு மதுப் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை அவரது மனைவி மரகதவல்லி கண்டித்தாராம்.

இதனால் மன விரக்தியில் இருந்து வந்த விநாயகமூா்த்தி, கடந்த 26-ஆம் தேதி வீட்டில் இருந்தபோது வயலுக்குத் தெளிக்கும் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

இதையடுத்து அவரை உறவினா்கள் மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு விநாயகமூா்த்தி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.