விழுப்புரத்தில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த தம்பதி உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம், கட்டபொம்மன் நகா் பகுதியில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து சோதனை செய்தபோது, அவா் போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது.
பின்னா் போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா், கட்டபொம்மன் நகரைச் சோ்ந்த சே.சஞ்சீவ்குமாா் என்பதும், இவா் தனது மைைவி சுரேகா (22) மற்றும் புதுச்சேரி வில்லியனூா், கோா்காடு பகுதியைச் சோ்ந்த த.ஸ்டீபன்ராஜ் (22) ஆகியோருடன் சோ்ந்து போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, 3 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 48 போதை மாத்திரைகள், 3 கைப்பேசிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
போதை மாத்திரை விற்பனை வழக்கில் கைதான சஞ்சீவ்குமாா் மீது அனந்தபுரம், விக்கிரவாண்டி, விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




