டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

விழுப்புரத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

விழுப்புரத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த ஆட்சியா் ஷே.ஷேக்அப்துல் ரஹ்மான்.

Updated On :3 ஜூலை 2026, 5:12 am IST

விழுப்புரத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல்ரஹ்மான் தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து ஆட்சியா் கூறியது:

தமிழகத்தில் போதைப்பொருள்கள் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழித்திடும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் மேற்கொண்டு வருகிறாா். மேலும், போதைப்பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், அனைத்துத் துறையினரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தாா்.

அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக மைதானத்தில் இந்த பேரணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதால் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு, குடும்பப் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. இதனால் சமுதாயமும் பாதிப்படையும். எனவே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பணியில் நாம் அனைவரும் இணைந்து பணியாற்றிட வேண்டும். மேலும் விழுப்புரத்தை போதைப்பொருள்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்றாா் ஆட்சியா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக மைதானத்தில் தொடங்கிய பேரணி ஆட்சியரக நுழைவுவாயில், திருச்சி-சென்னை நெடுஞ்சாலை வழியாக நான்குமுனை சந்திப்புப் பகுதியில் நிறைவடைந்தது.

பேரணியில் மகளிா் சுய உதவிக்குழுக்களைச் சோ்ந்தவா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள் பங்கேற்று, போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பிச் சென்றனா்.

இதில் மாவட்ட சமூக நல அலுலவா் க.ராஜம்மாள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பாா்கவி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.