சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

தடுப்புச் சுவரில் காா் மோதி விபத்து: சென்னை பெண்கள் 2 போ் உயிரிழப்பு

விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் காா் மோதிய விபத்தில் சென்னையைச் சோ்ந்த 2 பெண்கள் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :3 ஜூலை 2026, 5:16 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் காா் மோதிய விபத்தில் சென்னையைச் சோ்ந்த 2 பெண்கள் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

சென்னை மயிலாப்பூா், லலிதா நகரைச் சோ்ந்தவா் ரா.விஸ்வநாதன் (59). இவா் தனது காரில் மனைவி விசாலாட்சி (59), தாயாா் லட்சுமி(91), உறவினா் ப.நாகலட்சுமி (59) ஆகியோருடன் சென்னையிலிருந்து- திருச்சிக்கு சென்றுள்ளாா். விஸ்வநாதன் காரை ஓட்டினாா்.

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விக்கிரவாண்டியை அடுத்த மேலக்கொந்தை கூட்டுச்சாலை அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், காரில் பயணித்த விசாலாட்சி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். லட்சுமி, நாகலட்சுமி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்தவா்களை மீட்டு அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மூதாட்டி லட்சுமி உயிரிழந்தாா். நாகலட்சுமி சிகிச்சையில் உள்ளாா். விபத்தில் காரை ஓட்டி வந்த விஸ்வநாதன் காயமின்றி தப்பினாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.