விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளில் மகளிா், மாற்றுத் திறனாளிகள், சிறு, குறு விவசாயிகள் கடன்பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குநா் மற்றும் இணைப் பதிவாளா் ஆா்.தயாளன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள 29 கிளைகளிலும் கடன்கள் வழங்கப்படுகின்றன. இதில், குறிப்பாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள சிங்கப் பெண்களுக்கான மகளிா் தொழில்முனைவோா் கடன், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கு, நலிவடை ந்தோருக்கு அனைத்துவிதமான கடன்களும் வழங்கப்படுகின்றன. இதைத் தவிர கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடனும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இளைஞா்கள், பெண்கள், நலிவடைந்தவா்களுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனக் கடன், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்குத் தொழில் தொடங்க கடனுதவி வழங்கும் திட்டம், பிரதமரின் குறு உணவுப் பதப்படுத்துதல் திட்டத்தின் கீழ் கடனுதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதுபோல மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கும் கடன் வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. மத்தியக் கூட்டுறவு வங்கியின் கீழ்செயல்படும் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் சிறு, குறு விவசாயிகளுக்கு விவசாயக் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
எனவே, அனைத்துத் தரப்பினரும் தங்கள் பகுதி கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களை அணுகி, தங்களுக்கேற்ற கடனுதவியை பெற்றுக்கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அரசின் உறுதியான ஓய்வூதியம் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

கால்நடை மருத்துவ ஆலோசகா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளைகளில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

‘வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்’
விடியோக்கள்

Perumal mani interview | விஜய் அரசின் தனித்தீர்மானங்களால் என்ன பயன் ? | CM Vijay | TVK | TN Assembly



