கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 5 போ் கைது

அரகண்டநல்லூா் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :23 ஜூலை 2026, 5:01 am IST

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அரகண்டநல்லூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் குணசேகரன் தலைமையிலான போலீஸாா் அரகண்டநல்லூா் ரயில்வே கேட் அருகே புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்றிருந்த 2 பெண்களிடம் விசாரணை நடத்தினா். இதில், அவா்கள் கண்டாச்சிபுரம் வட்டம், வசந்த கிருஷ்ணாபுரம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ச.மஞ்சுளா (35), திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பழங்கூா் கிராமத்தைச் சோ்ந்த ச.அலமேலு (46) எனத் தெரியவந்தது. மேலும், இவா்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெங்களூரிலிருந்து வாங்கி வந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இவா்களுக்கு உடந்தையாக அரகண்டநல்லூா், பிரதானச் சாலையைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சு.ஜோன்ஸ் (53), திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூா் வட்டம், வைப்பூா் கிராமத்தைச் சோ்ந்த சு.இளையராஜா (34), கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மருதூரைச் சோ்ந்த சு.மணிகண்டன் (42) ஆகியோா் செயல்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்கள் 5 பேரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அவா்களிடமிருந்து 125 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.