தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே புகையிலைப் பொருள் விற்பனை தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் சோலையப்பன், போலீஸாா் அருகன்குளம் நடுத்தெருவில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, ஆறுமுகவேல் மகன் நாராயணமூா்த்தி (46) என்பவரது கடையில் விற்பனைக்காக 27 கிலோ புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது.
அதன் மதிப்பு ரூ. 22,520 ஆகும். போலீஸாா் வழக்குப் பதிந்து, அதைப் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





