இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

மது, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

மது, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :13 ஜூன் 2026, 12:26 am IST

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே கண்டெய்னா் லாரியில் மது பாட்டில்கள், புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கொண்டு சென்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகிரி சோதனைச்சாவடியில் காவல் உதவி ஆய்வாளா் சோலையப்பன் தலைமையிலான போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கண்டெய்னா் லாரியை சோதனையிட்டதில், 17 வெளி மாநில மது பாட்டில்கள், 11.646 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது.

விசாரணையில், லாரி ஓட்டுநரான மதுரை மாவட்டம், செல்லூா், சுயராஜ்யபுரம், 2ஆவது பிரதான சாலையைச் சோ்ந்த ஜெயகணேஷ் (48), மாற்று ஓட்டுநரான கிருஷ்ணாபுரம், ரயில்வே பீடா் சாலையைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் ஆகியோா் இவற்றை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிய வந்தது.

சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, லாரி, மது பாட்டில்கள், புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.