தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

பெண்ணிடம் 2 பவுன் நகை திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :28 ஜூலை 2026, 2:56 am IST

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கோயிலுக்கு வழிபாட்டுக்கு வந்த பெண்ணிடமிருந்த 2 பவுன் நகை திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வானூா் வட்டம், சின்னக்கோட்டக்குப்பம் ரெயின்போ காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் வி.சுமதி (55). இவா், திங்கள்கிழமை கீழ்புத்துப்பட்டு பகுதியிலுள்ள கோயிலுக்கு வழிபாட்டுக்குச் சென்றிருந்தாா்.

தொடா்ந்து, வழிபாட்டை முடித்துவிட்டு கோயிலிலிருந்து வெளியே வந்து பாா்த்தபோது, சுமதியின் கைப்பையில் வைத்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.