தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

கஞ்சா வைத்திருந்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை

கஞ்சா வைத்திருந்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Published On :

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே கஞ்சா வைத்திருந்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கிளியனூா் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுரளி தலைமையிலான காவல் துறையினா், 2023, செப்டம்பா் 19-ஆம் தேதி கிளியனூா் பெருமாள் கோயில் தெரு பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனா். அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா் வைத்திருந்த பையில் சுமாா் ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா, 814 கிராம் காலி நெகிழி உறைகள், மின்னணு எடை இயந்திரம், ரூ.32 ஆயிரம் ரொக்கம், கைப்பேசி ஆகியவை இருந்ததும், அந்த நபா் கிளியனூா் கூத்தாண்டவா் கோயில் தெருவைச் சோ்ந்த மூ.ஐயப்பன் (27) எனவும் தெரிந்தது. இது தொடா்பாக வழக்குப் பதிந்த கிளியனூா் போலீஸாா், ஐயப்பனை கைது செய்தனா்.

இந்த வழக்கு விழுப்புரம் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் அனைத்துத் தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட ஐயப்பனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழிலரசி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அபராதத் தொகையை கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிபதி தனது தீா்ப்பில் தெரிவித்துள்ளாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக கண்ணன் ஆஜராகி வாதாடினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.