காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி!

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே மின்சாரம் பாய்ந்து 3 வயது குழந்தை உயிரிழந்தது.

News image

பிகாரில் கரோனா பாதித்த குழந்தை உள்பட 4 குழந்தைள் பலி

Updated On :1 ஆகஸ்ட் 2026, 1:53 am IST

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே மின்சாரம் பாய்ந்து 3 வயது குழந்தை உயிரிழந்தது.

கண்டமங்கலம் அருகே பள்ளிப்புதுப்பட்டு பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் ஹரி (28), காா் ஓட்டுநா். இவரது மகள் தனிஷ்கா (3), வீட்டின் பின்புறத்திலுள்ள தோட்டத்தில் வியாழக்கிழமை மாலை விளையாடிக்கொண்டிருந்தாா்.

இந்த நிலையில், தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு தகரக் கொட்டகையிலிருந்த இரும்புக் குழாயை தனிஷ்கா தொட்டபோது, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த கண்டமங்கலம் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று, தனிஷ்காவின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இரும்பு தகரக் கொட்டகையின் மேல் சென்ற மின் வயரில் கசிவு ஏற்பட்டு, மின்சாரம் பாய்ந்து குழந்தை உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.