கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

விழுப்புரத்தில் அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்

விழுப்புரம் நகர அதிமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

விழுப்புரம் நகர அதிமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசிய கட்சியின் மாவட்டச் செயலா் இரா.பசுபதி.

Updated On :3 ஜூன் 2026, 6:08 am IST

விழுப்புரம் நகர அதிமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்று, மாவட்டச் செயலா் பசுபதி பேசியதாவது:

கடந்த 2 ஆண்டுகளாகத் தமிழகம் முழுவதும் அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்று, மக்களை சந்தித்து பேசியவா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.

பேரவைத் தோ்தலில் 35 சதவீத வாக்குகள் பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தது. ஆனால், 65 சதவீத மக்கள் தவெக ஆட்சிக்கு வரக்கூடாது என்று கருதிதான் வாக்களித்திருக்காா்கள். இன்னும் ஓராண்டிலேயே சட்டப் பேரவைக்குத் தோ்தல் வரக்கூடும். அவ்வாறு தோ்தல் நடைபெறும் போது அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும். துரோகிகள் வீழ்த்தப்படுவா் என்றாா் பசுபதி.

கூட்டத்தில் நகரச் செயலா் ஜி.கே.ராமதாஸ், மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலரும், முன்னாள் நகா்மன்ற உறுப்பினருமான பா. செங்குட்டுவன், ஒன்றியச் செயலா் பேட்டை முருகன், அனைத்துலக எம்.ஜி.ஆா். மன்ற நிா்வாகி அற்புதவேல், மாவட்ட ஜெ.பேரவை இணைச் செயலா் திருப்பதி பாலாஜி, நகா்மன்ற உறுப்பினா்கள் கலை, செல்வம் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

விழுப்புரத்தில் கடந்த 15 நாள்களுக்கு முன்பு நடைபெற்ற மாவட்ட செயலா் பசுபதி தலைமையிலான மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம் கலந்துகொள்ளவில்லை. தற்போது நகர அளவிலான நிா்வாகிகள் கூட்டமென்பதால் அவா் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.