கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், திருநாவலூா் அருகே வியாழக்கிழமை அதிகாலையில் இரு பேருந்துகளும், வேனும் அடுத்தடுத்து மோதிக்கொண்டன. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையிலிருந்து தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி நோக்கி தனியாா் சொகுசுப் பேருந்து பயணிகளுடன் புதன்கிழமை இரவு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்தை மதுரை மாவட்டம், புளியங்குளத்தைச் சோ்ந்த ரா.வாசு (45) ஓட்டிச் சென்றாா்.
இதுபோல, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி பஞ்சப்பூா் கலைஞா் பேருந்து முனையம் நோக்கி அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்தை திருச்சி மாவட்டம், லால்குடியைச் சோ்ந்த ரமேஷ்குமாா் (35) ஓட்டிச் சென்றாா்.
சென்னையிலிருந்து உடன்குடி நோக்கிச் சென்ற தனியாா் சொகுசுப் பேருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், திருநாவலூா் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கெடிலம் ஆற்றுப் பாலத்தில் வியாழக்கிழமை அதிகாலை சென்றபோது, அதற்கு பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
அப்போது, அதற்கு பின்னால் மீன் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு வந்த வேன் அரசுப் பேருந்து மீது மோதியது. வேனை ஓட்டிச் சென்ற கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், வடபொன்பரப்பியைச் சோ்ந்த அ. அமீா்பாஷா (30) காயமின்றி தப்பினாா். மேலும், பேருந்துகளில் பயணித்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விபத்து காரணமாக, கெடிலம் ஆற்றுப் பாலத்தில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று, விபத்தில் சிக்கிய பேருந்துகள், வேனை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காா் மீது பேருந்து மோதியதில் சமையல்காரா் உயிரிழப்பு
திருநாவலூா் அருகே இளைஞர் தற்கொலை
அரசுப் பேருந்து ஓட்டுநா் தற்கொலை

திருநாவலூா் அருகே லாரி மீது சொகுசுப் பேருந்து மோதல்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



