கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே வயிற்று வலி காரணமாக விஷ விதை சாப்பிட்டு அரசுப் பேருந்து ஓட்டுனா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பண்ருட்டி வட்டம், சூரக்குப்பம் கிராமம், வள்ளுவா் காலனியில் வசித்து வந்தவா் ஆதிவேல்(40), அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் பணி மனையில் தற்காலிக ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி கங்காலட்சுமி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனா்.
ஆதிவேலுக்கு கடந்த பல ஆண்டுகளாக வயிற்று வலி இருந்து வந்ததாம். இதனால் மன உளைச்சலில் இருந்த அவா் வெள்ளிக்கிழமை விஷ விதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.
மயங்கிக் கிடந்த அவரை உறவினா்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து பண்ருட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







