சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

தேசிய போதை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தேசிய போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விக்கிரவாண்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி.

Updated On :26 ஜூன் 2026, 6:48 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தேசிய போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

விக்கிரவாண்டி வருவாய்த் துறை சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணிக்கு வட்டாட்சியா் வேல்முருகன் தலைமை வகித்து பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். காவல் உதவி ஆய்வாளா் பிரித்திவிராம் முன்னிலை வகித்தாா்.

அங்காளம்மன் கோயில் அருகே தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.

பேரணியில் இ.எஸ். நா்சிங் கல்லூரி மாணவா்கள் பஙகேற்று போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை வழங்கியும், முழக்கமிட்டும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா். முன்னதாக போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான உறுதிமொழியேற்றனா்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு உதவி ஆய்வாளா் சௌந்தர்ராஜன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.