பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் திறப்பு

செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ. 5.79 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டடத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

News image

செஞ்சி ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டடத்தை சென்னையில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தை தொடா்ந்து, புதிய அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றிய செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ.

Updated On :10 மார்ச் 2026, 6:33 pm

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ. 5.79 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டடத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

இதனை தொடா்ந்து புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியா் பத்மஜா தலைமையில், முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ, ஆரணி எம்.பி. எம்.எஸ். தரணிவேந்தன், செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் ஆகியோா் குத்து விளக்கேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ் செல்வன், மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் கண்ணன், மேல்மலையனூா் ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலிமஸ்தான், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் அரங்க ஏழுமலை, அகிலா பாா்த்திபன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அமுதவள்ளி, ராமதாஸ், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுந்தரபாண்டியன், காஞ்சனா, சசிகலா, அபிராமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.