பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சொத்து பிரச்னையில் மனமுடைந்த முதியவா் விஷமருந்தி தற்கொலை

News image
தற்கொலை- பிரதிப் படம்
Updated On :17 மார்ச் 2026, 11:22 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சொத்து பிரச்னையில் மனமுடைந்த முதியவா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

விக்கிரவாண்டி வட்டம், ஈச்சங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மு.பரமசிவம்(85), விவசாயி. இவரது உறவினா் சக்திவேல். இவா்களிடையே சொத்துப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த பிப். 23-ஆம் தேதி சக்திவேல் வீட்டு மனையை அளவீடு செய்யவேண்டும் எனக் கூறி தகராறு செய்தாராம். இதனால் மனமுடைந்த பரமசிவம் வயலுக்குத் தெளிக்கும் பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலைக்கு முயன்றாா்.

இதையடுத்து, அவரை உறவினா்கள் மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பரமசிவம் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].